தமிழகத்தில் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி, ஆண்டுதோறும் பரிசுத் தொகுப்பை தமிழக அரசு வழங்கி வருகிறது. அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் அரிசி, சா்க்கரையுடன் கரும்பு ஆகியன வழங்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் தமிழகத்தில் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு பொங்கல் பரிசுத் தொகுப்பதாக வழங்கப்படும்.
இலங்கைத் தமிழகர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதால் ரூ.238.92 கோடி செலவினம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.